- நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று
நரம்புகள் சுருண்டு குடைச்சல் தருவதை நரம்பு சுருட்டல் அல்லது நரம்புசுளிவு (varicosis veins) என்கிறோம். - இதனை கவனிக்காமல் விட்டால் இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து
மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம். - பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும்
சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும்,
தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும்.. - பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி
நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.. - 10 முதல் 20 சதவீத மக்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வெளியில் காட்டாத சிறிய நிலையிலும்,
சிலருக்கு எளிதில் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளது.. - குறிப்பாக 30 முதல் 70 வயதினரிடையே இந்நோய் தாக்கம் அதிகம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உள்ளது..
- தற்போதைய ஆராய்ச்சியில் பாதிப்பிற்குள்ளான 50 சதவீத மக்களிடம் பாரம்பரியமாக
இந்நோய் இருப்பதாக கூறுகிறார்கள். நமது கால்களில் ரத்த ஓட்டம் சீராக ஓடாமல் இருப்பதால் ஏற்படுகிறது.. - அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால்
ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில்
அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும்.. - இதனையே வெரிக்கோசிஸ்வெயின் என்கிறோம். பொதுவாக செக்யூரிட்டி நபர்கள்,
தள்ளுவண்டி ஓட்டுநர், போர் வீரர்கள், துணி துவைப்பவர்கள், ஓட்டுநர் போன்றவர்களையும்,
அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களையும் பாதிக்கிறது.. - காரணங்கள்: அதிக நேரம் நிற்பது, நடப்பது, உட்காருவது, அதிக உடல் எடை,
கர்ப்பகாலத்தில் வருவது பிரசவத்திற்கு பின்னர் இருப்பது இல்லை.. - ரத்தநாளங்களில் உள்ள வால்வுகள் செயல் இழப்பதாலும், ரத்த குழாய் மெல்லியதாகி
தளதளஎன ஆகிவிடுகிறது. வெட்டுகாயம், அடிபட்டாலும் வரலாம்.. - அறிகுறி: இடுப்பிற்கு கீழ் ஒன்றுக்கு அதிகமான நரம்புகள் சுருண்டும், வீங்கியும் சிலந்தி கூடு போன்று தென்படும்.
சில சமயம் இரவுநேரம் வலி வீக்கம், பாதம் மரத்து போகும் நிலை ஏற்படுகிறது.. - நோய் முற்றிய நிலையில் குழாய் வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும்.
சில சமயம் (eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனை ஏற்படும்.. - கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால் வால்வுகளில் கோளாறு இருப்பதாக கருதலாம். நோயினால் வரும்.
- பிரச்னைகள்: தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம்
ரத்தம் உறைந்து கட்டி ஆவதே. உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி
நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும்.. - டிவிடி (deepveinthromfosis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின்
உள் ஒட்டி கொண்டு இருக்கும். இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் இருதயம் மற்றும்
மூளையில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உதவியுடன் கண்டறியலாம்.. - சிகிச்சை: ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கால்களில், பெருந்தொடையில் இருந்து சிறு தொடை வரை நீளகால் உறை அணிவதன் மூலம் குணம்கிடைக்கிறது..
- ரத்த குழாய் சிலந்தி வலை போன்று காணப்பட்டால் மைக்ரோஸ்கிளிரோதெரபி எனும்
அறுவை சிகிச்சை மூலமும், லேசர், ஆம்புலேட்டரி பிளப்பக்டமி மூலம் குழாய்களை வெட்டி அகற்றியும்,
சிகிச்சை மூலம் பலன்பெறலாம்.. - ஆயுர்வேத சிகிச்சை: தோல் மருந்துகளான மஞ்சள். சுக்கு, பெருங்காயம், மிளகு, அந்தி மந்தாரை, வெண்தேக்கு, திப்பிலி, சகச்சரம், சிறுவில்வம்,
புங்கை, குகுலு, மூக்கிரட்டை, கொடுவேலி, மாவிலங்கம், வாய்விடங்கம், வில்வம், நெருஞ்சிள், திரிபலா, பூண்டு, நன்னாரி, சீந்தில், தசமூலம், அக்கினிமந்தை, மூங்கில் உப்பு, இந்துப்பு
போன்றவை நல்ல பயன்களை தருகிறது
ரத்தத்தை வெளியில் எடுக்கும் ரத்தமோட்சணம் மற்றும் வஸ்தி போன்ற சிகிச்சை சிறந்தது.. - தவிர்ப்பு முறை: அதிக நேரம்நிற்ககூடாது. இருக்கவும் கூடாது. சீரான உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகவும், உடல் எடையை குறைத்தும், உயர்ந்த காலனிகளை தவிர்க்கவேண்டும். இறுகிய உடை அணிவதையும் தவிர்க்க வேண்டும்..
- ஒரு நாள் ஒரு முறையேனும் கால்களை இருதய மட்டத்திற்கு மேல் வைக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் நீண்ட கால் உறைகளை அணிவதன் மூலம் வீக்கம், வலியை தவிர்க்கலாம்.
தயிர், வறுத்த, பொறித்த, துரித, குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.. - வீட்டு வைத்தியம்: வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாளையில் அரைத்து பூசலாம். இரண்டு மணி நேரம் உலர விட்டு 20 நாள் வரை செய்ய வேண்டும்..
- புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்..
நல் வாழ்வு
Wednesday, December 1, 2021
பெண்களை பாதிக்கும் நரம்பு சுருட்டல் - கட்டுப்படுத்துவது எப்படி?
பெண்களை பாதிக்கும் நரம்பு சுருட்டல் - கட்டுப்படுத்துவது எப்படி?
Tuesday, November 30, 2021
Sunday, November 28, 2021
ஆண் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருக
ஆண் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருக
- ஆண் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருக பலா பிஞ்சினை சமைத்து உண்ண ஆண்மை அதிகரிக்கும்
- சுரைக்காயை சமைத்து சாப்பிட்டுவந்தால் ஆண்மை அதிகரிக்கும்
சுரைக்காய் விதைகள் ஆண்மையை பெருக்கும் குணம் உள்ளது.
- ஆலமரத்தின் மொக்கு, தளிர் இலை, விழுது, விதைகள், இவற்றிற்ல் ஏதேனும் ஒன்றை
அரைத்து அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
- அரச விதையை பாலில் கலந்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
பெண்ணுக்கும் கரு உற்பத்தி ஆகி கரு நல்ல முறையில் வளரும்
- முருங்கைக் கீரை : முருங்கை காய், முருங்கை பிசின் என அனைத்துமே ஆண்மையை பெருக்கும் உணவாக உள்ளது.
முருங்கை கீரையை பொரியல் செய்து அதனை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து
உண்டு வந்தால் ஆண்மை விருத்தியாகும்.
குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்
- ஓரிதழ் தாமரை ஆண்மையை பெருக்கும் ஒரு அற்புத மூலிகை.
ஓரிதழ் தாமரை சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
இந்த சூரணத்தை வாங்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில்
ஒரு டீஸ்பூன் பொடியை நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு
, பின்னர் ஆட்டுப்பால் ஒரு தேக்கரண்டி அளவு குடித்து வர வேண்டும்.
தொடர்ந்து நிறுத்தாமல் ஒரு மண்டலம் ( 48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால்
இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம்.
ஆண்மை குறைவு காரணமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்
சுரைக்காய் விதைகள் ஆண்மையை பெருக்கும் குணம் உள்ளது.
அரைத்து அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
பெண்ணுக்கும் கரு உற்பத்தி ஆகி கரு நல்ல முறையில் வளரும்
முருங்கை கீரையை பொரியல் செய்து அதனை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து
உண்டு வந்தால் ஆண்மை விருத்தியாகும்.
குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்
ஓரிதழ் தாமரை சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
இந்த சூரணத்தை வாங்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில்
ஒரு டீஸ்பூன் பொடியை நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு
, பின்னர் ஆட்டுப்பால் ஒரு தேக்கரண்டி அளவு குடித்து வர வேண்டும்.
தொடர்ந்து நிறுத்தாமல் ஒரு மண்டலம் ( 48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால்
இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம்.
ஆண்மை குறைவு காரணமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்
Friday, July 2, 2021
இயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு டிப்ஸ்
நகம் நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள் அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம். காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும், வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். நகத்தைப் பராமரிக்க: பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும். இதழ்களை பராமரிக்க: நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலேசாக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும் உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் செய்வதென்னவோ சுலபமான வேலைதான். நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள். பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி. கழுத்தை பராமரிக்க: : சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும். சருமத்தைப் பராமரிக்க: ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும். கருவளையம் நீங்க: கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும். கருப்பு திட்டுகளை நீக்க: சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும். இயற்கை கிளென்சர்: நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல cleanser ஆகும். குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும். இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய் உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம். எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால் சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம். வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம். முகப்பரு போக்க: ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள். காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற மாவு)5 கிராம். இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில் சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும். மற்றொரு முறை: வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும். முடிவாக மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப் பொருட்களைக் கொண்டு செய்வதால் முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். Wednesday, June 30, 2021குழந்தைகளுக்கு பார்லி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
|
---|