Saturday, June 26, 2021

Zee Digital தனது 13 பிராண்டுகளுக்கான இணைய செயலிகளை அறிமுகப்படுத்துகிறது

Zee Digital தனது 13 பிராண்டுகளுக்கான இணைய செயலிகளை அறிமுகப்படுத்துகிறது.
தொழில்நுட்ப அணுமுறையின் மூலம், தங்கள் தளத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் ZEE டிஜிட்டல், 9 பிராந்திய மொழிகளில் தேசிய மற்றும் பிராந்திய செய்திகளை வழங்கும் தனது 13 செய்தி பிராண்டுகளுக்கான இணைய செயலிகளை (PWA) அறிமுகப்படுத்துகிறது.
புது தில்லி, ஏப்ரல் 26, 2021: தொழில்நுட்ப அணுமுறையின் மூலம், தங்கள் தளத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் ZEE டிஜிட்டல், 9 பிராந்திய மொழிகளில் தேசிய மற்றும் பிராந்திய செய்திகளை வழங்கும் தனது 13 செய்தி பிராண்டுகளுக்கான இணைய செயலிகளை (PWA) அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம், இது போன்ற முயற்சியை மேற்கொள்ளும் நாட்டின் முதல் ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாக உருவெடுத்துள்ளது

நாட்டில் மட்டுமல்ல உலகிலேயே, மிகப்பெரிய அளவில், PWA என்னும் இணைய செயலிகள் அறிமுகம் செய்யப்படுகிறது என்றால் அது மிகையல்ல.
இணையத்தில், தங்கள் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் நோக்கில், மொபைலில் PWA என்னும் இணைய செயலிகளை வழங்கும் பேஸ்புக், ட்விட்டர், அலிபாபா, உபெர், லிங்க்ட்இன் (Facebook, Twitter, Alibaba, Uber, LinkedIn ) போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் ZEE டிஜிட்டல் இணைகிறது.
இப்போது இந்தியாவின் சிறந்த ஒளிபரப்பு செய்தி பிராண்டுகளான ZeeNews.com, Zee24Ghanta.com, ZeeHindustan.in, Zee24Kalak.in, 24Taas.com, ZeeRajastha.com, ZeeBiharJharkhand.com, ZeeUpUk.com, மற்றும் ZeeMpCg.com ஆகியவற்றின் பயனர்கள், மொபைல் வலைதளத்தில் சிறந்த அனுபவத்தை பெற்று பயனடைவார்கள்.

கடந்த ஆண்டுகளில் இந்த செய்தி தளங்களில், வலைதளத்திற்கு வரும் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 65% க்கும் அதிகமான அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், வலைதளத்தின் ஆர்கானிக் ட்ராபிக்கை மேலும் 200% வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

பெண்களை பாதிக்கும் நரம்பு சுருட்டல் - கட்டுப்படுத்துவது எப்படி?

பெண்களை பாதிக்கும் நரம்பு சுருட்டல் - கட்டுப்படுத்துவது எப்படி? நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று நரம்புக...